பதிவு செய்த நாள்
09
மே
2017
12:05
சின்னமனுார்:சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கண்ணாடிக்கடை முக்கில் நிறுத்தப்பட்டுள்ள தேர் இன்று மாலை நிலையை வந்தடையும்.பிரசித்தி பெற்ற சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பூலாநந்தீஸ்வரர் --சிவகாமியம்மன் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி காலை 9மணிக்கு நடந்தது. சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன.
மாலை 5 மணிக்கு கோயில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.கோயில் திருப்பணிக்குழு தலைவர் விரியன் சுவாமி, தொழில் முதலீட்டாளர் துர்கா.வஜ்ரவேல், நகராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ், மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் மனோகரன், கண்ணம்மாள் கார்டன். ராஜேந்திரன், வர்த்தக சங்க தலைவர் சிவகாமிநாதன், கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் பால்பாண்டி, மாவட்ட தி.மு.க., விவசாய அணி செயலாளர் மயில்வாகனன், கலைமகள் ஏஜன்ஸி பங்குதாரர் காமராஜ், சிவசக்தி ஏஜன்ஸி உரிமையாளர் பழனிச்சாமி, எழுத்தாளர் மனோகரன், ஜி.ஆர்.டி.டிரஸ்ட் ஆலோசகர் சேதுராமன், விஷ்வாஸ் ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் கலையரசன், இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் அண்ணாமலை, ஸ்ரீ ராம விலாஸ் ஜூவல்லரி பங்குதாரர் மணிகண்டன், விக்னேஷ் கல்வி மைய நிர்வாகி சந்தன முத்தையா, சூர்யா ஏஜன்ஸி உரிமையாளர் அழகுவேல், ஆனந்தம் பர்னிச்சர்ஸ் உரிமையாளர்கள் மாரிச்சாமி, மனோ உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய பகுதிகள் வழியாக வந்து கண்ணாடி கடை முக்கில் நிறுத்தப்பட்டு தேர் இன்று மாலை நிலை வந்தடையும்.