பதிவு செய்த நாள்
09
மே
2017
02:05
எலச்சிபாளையம்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், நல்லாம்பாளையத்தில் மாரியம்மன், மதுரைவீரன், செல்வ விநாயகர், காளியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 4 இரவு, 10:00 மணிக்கு,
கோவில் அருகே இருக்கும் பொதுக் கிணற்றில் கம்பம் போடப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 5 மற்றும் 6 தேதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 7 காலை, 6:00 மணிக்கு பொங்கல்
வைக்கப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, கிடாவெட்டுதல், மாலை, 4:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று
காலை, 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு, 7:00 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா முடிவடைந்தது.