ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று மதியம் மட்டையடி உற்சவம் நடந்தது. முன்னதாக உற்சவமூர்த்தி யக்ஞவராகன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள வளாகத்தில் மட்டையடி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.