திருநெல்வேலி : பாளை., என்ஜிஓ.,"ஏகாலனி வேங்கடாசலபதி கோயிலில் 1008 தீப உத்ஸவம் 6ம் ஆண்டு நிறைவு விழா இன்று(11ம்தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு ஸஹஸ்ரதீபம் ஏற்றுதலும், இரவு 7 மணிக்கு லட்சுமி ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், 7.30 மணிக்கு திருவாராதனமும், 8 மணிக்கு தீர்த்த பிரசாத கோஷ்டியும் நடக்கிறது. நாளை(12ம்தேதி) காலை 9 மணிக்கு உத்ஸவர் அலங்கார திருமஞ்சனமும், 11 மணிக்கு சேரன்மகாதேவி வெங்கடேச பாகவதரின் திவ்யநாம பஜனையும், மதியம் 1மணிக்கு 1000 திருப்பாவாடை சமர்ப்பித்தலும், 1.30 மணிக்கு தீர்த்த பிரசாத கோஷ்டி, அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தக்கார் முருகன் செய்து வருகின்றனர்.