பதிவு செய்த நாள்
16
மே
2017
12:05
ஊத்துக்கோட்டை : ஓம் நவசக்தி பாதாள பொன்னியம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு சித்திரை திருவிழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். பூண்டி ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் உள்ளது ஓம் நவசக்தி பாதாள பொன்னியம்மன் கோவில். இங்கு, நான்காம் ஆண்டு, சித்திரை திருவிழா, கடந்த, 12ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த இவ்விழாவில், அம்மனுக்கு தாய்வீட்டு வரிசை, அபிஷேகம், காப்பு கட்டுதல், அருள்வாக்கு மற்றும் பதிவேள்வி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கரகம் புறப்பாடு மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.