Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் ... வெயில் பாதிப்பை தவிர்க்க கஸ்துாரிக்கு கவனிப்பு வெயில் பாதிப்பை தவிர்க்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா தபால் அட்டைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா தபால் அட்டைகள் வெளியீடு

பதிவு செய்த நாள்

17 மே
2017
11:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாக்களின் பெருமையை விளக்கும் வண்ணம் முதல் முறையாக சிறப்பு தபால் அட்டைகள் நேற்று வெளியிடப்பட்டன.மீனாட்சி அம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் விழா நடந்தது. தபால்துறை உதவி கண்காணிப்பாளர் ஆனந்தி வரவேற்றார். கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு தபால் அட்டைகளை தபால்துறை தென் மண்டல இயக்குனர் நிர்மலாதேவி வெளியிட, இணை கமிஷனர் நடராஜன் பெற்று கொண்டார்.

நிர்மலாதேவி பேசியதாவது: மதுரை சித்திரை திருவிழா கோலங்கள், காட்சிகள் தபால் அட்டைகளில் அச்சிடப்பட்டு, அக்காட்சிக்கு ஏற்றவாறு பொருத்தமான தபால் தலைகள் ஒட்டப்பட்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக சித்திரை திருவிழா சிறப்பு தபால் அட்டைகள் வெளியிடப்பட்டன. உதாரணமாக, மீனாட்சி பட்டாபிஷேகம் தபால் அட்டையில் இடம் பெற்றிருக்கும். பெண் எழுச்சியை குறிக்கும் தபால் தலை, முகவரி எழுதும் பகுதியில் இடம் பெற்றிருக்கும். இதுபோல் 18 சிறப்பு தபால் அட்டைகள் கொண்ட உறை வெளியிடப்பட்டுள்ளது. உறை ஒன்றின் விலை 500 ரூபாய். இந்த வெளியீடு 500 எண்ணிக்கையில் வெளியாக உள்ளது. குறிப்பிட்ட காலம் மட்டுமே மதுரை தலைமை தபால் நிலையத்தில் கிடைக்கும். இது தமிழ் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம் மதம், இனம், மொழிகளை கடந்து அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, என்றார். கோயில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், உதவி இயக்குனர் அழகர்சாமி, உதவி கண்காணிப்பாளர் (தொழில்நுட்பம்) சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar