சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2017 12:05
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா, விலங்கையா கோயிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது. பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த 30ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அன்றிலிருந்து உபயதாரர்கள் சார்பில் மண்டகப்படி நடந்தது. தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் ஏக சப்பரத்தில் நகர்வலம் வந்தார். மே 7ம் தேதி சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற 18 நாள் மண்டகப்படி நிறைவடைந்ததையொட்டி, நேற்று காவல் தெய்வமான விலங்கையா கோயில் சிறப்பு பூஜைகளுடன் சித்திரை திருவிழா நிறைவடைந்தது. 2019ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், கோயில் திருப்பணி மேற்கொள்ள ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் திருப்பணிக்குழு தலைவர் விரியன்சுவாமி தலைமையில் துவங்கவுள்ளது.