பக்தர்கள் வருகை அதிகரிப்பு: வெப்பம் தணிக்க தண்ணீர் தெளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2017 11:05
ராமநாதபுரம்: தேவிபட்டினம் நவபாஷாண தீர்த்தம் பகுதிக்கு கோடை விடுமுறை என்பதால் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். வெப்பம் அதிகரித்ததால் , சுற்றுலாப்பயணிகள் நடை பாதையில்தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேவிபட்டினம் கடற்கரைப்பகுதியில் நவபாஷாண தீர்த்தம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தோஷ நிவர்த்திக்காக புனித நீராடுகின்றனர். கோடை விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பகல் நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளது. நவபாஷாண தீர்த்த குளத்திற்கு செல்லும் பாதைகளில் சிமென்ட் தளத்தில் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இங்கு செல்லும் போது காலணிகள் அணிவதில்லை. இதன் காரணமாக பயணிகள் நடக்க முடியவில்லை. தண்ணீர் தெளிப்பு: நவபாஷாண தீர்த்த நடை பாதை பகுதிகளில் வெப்பம் கொளுத்தும் நேரத்தில் பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.