பதிவு செய்த நாள்
19
மே
2017
12:05
கோவை :அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள, மண்டல அளவில், 600 பேருக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அமர்நாத் புனித யாத்திரை, வரும் ஜூன், 29ல் துவங்கி, ஆக., 7ம் தேதிவரை நடக்கிறது. இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்வது அவசியம். யாத்திரைக்கான அனுமதியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, பல்வேறு வங்கி கிளைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். யாத்திரைக்கான அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட டாக்டர், தனியார் மருத்துவமனைகளால், வழங்கப்படும் சுகாதார சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழை வழங்க மாநில வாரியாக அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளின் பட்டியல், விண்ணப்ப மாதிரியை தீதீதீ.ண்டணூடிச்ட்ச்ணூணச்tடடீடிண்டணூடிணஞு.ஞிணிட் என்ற இணையதளத்தில் பெறலாம்.
ஏப்., முதல் இச்சான்றிதழ் வழங்குவதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, தற்போது சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தமிழகத்தில் உள்ள, 20 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மருத்தவமனை இருப்பிட மருத்துவ அலுவலர்கள் அதற்கான பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர்
சவுந்திரவேல் கூறியதாவது: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியை சேர்ந்தவர்கள், சுகாதார சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளனர். யாத்திரைக்கு செல்பவர்களுக்கு, அதற்காக வரையறை செய்யப்பட்ட உடல் தகுதி, வயது இருக்க வேண்டும். உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., மலையேறுவதில் பயிற்சி உள்ளிட்டவை பரிசோதனைகள் மூலம், உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை, 600 பேருக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.