சும்மா இருப்பதே சுகம் என்பதற்கு உழைக்காமல் இருந்து விடலாம் என்பது தான் பொருளா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2011 04:11
நாலு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார்கள். நாம் எது சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாத சூழலில், நாம் சும்மா இருப்பதே சுகம். நமக்குத் தெரிந்தவர் தவறான பாதையில் சென்று திடீர் பணக்காரராகி வசதி வாய்ப்புகளுடன் ஜொலிக்கிறார். நம்மையும் அவரது பாதையில் செல்ல அழைக்கிறார். நாம் யோசிக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் அவர் அகப்படுவார். வசதிகளும் பறந்துவிடும். சமுதாயத்திலும் தலை நிமிர முடியாது. எனவே நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கி சும்மா இருப்பதே சுகம். இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தையை சோம்பேறித்தனத்திற்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது. உழைப்பு என்னும் உயர்ந்த பாதையில் சென்றால் தான், உண்மையான மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் நிலைக்கும்.