பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
ஆத்தூர்: விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள, 10 கடை உரிமையாளர்கள், 2.10 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை செலுத்தினர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், 35 கடைகள், ஐந்து குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை, ஐந்து ஆண்டுகள் வரை வாடகை செலுத்தாததால், நிலுவைத்தொகை, 40.16 லட்சம் ரூபாய் இருந்தது. நேற்று முன்தினம், இந்து சமய அறநிலையத்துறை உள்பட, 13 துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, இறந்துபோன தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, அவரது சகோதரர் கந்தசாமி, தி.க., மாவட்ட தலைவர் வானவில் உள்ளிட்டோரின், 15 கடைகள், நான்கு வீடுகள் உள்பட, 19 பேர் பயன்படுத்திய இடத்துக்கு நோட்டீஸ் வழங்கினர். நேற்று, வானவில், இரு கடைகளுக்கான வாடகை நிலுவைத்தொகை, 54 ஆயிரத்து, 552 ரூபாய், ராமசாமி, கந்தசாமியின் இடத்துக்கு, அவரது குடும்பத்தினர், நிலுவை வாடகை, 69 ஆயிரத்து, 230 ரூபாய் உள்பட, பத்து கடைக்காரர்கள், 2.10 லட்சம் ரூபாயை, செயல் அலுவலர் கிருஷ்ணனிடம் வழங்கினர்.