பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மஹா காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் மா விளக்கை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள மஹா காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 19ல் துவங்கியது. 20ல் ஆஞ்சநேயருக்கு பூஜையும், 21ல் செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 22ல் முருகனுக்கு அபி?ஷக ஆராதனையும், 23ல் மாரியம்மனுக்கு பொங்கலும் வைத்து வழிபட்டனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, அக்கு மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பின், 10:00 மணிக்கு மஹா காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை, 4:00 மணிக்கு கரக வீதி உலா நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் மா விளக்கை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இன்று (மே, 25) ஜிஞ்சம்பட்டி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில், எண்ணை மரம் ஏறுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.