பழநி, பழநி திருமுருக பக்தசபா சார்பில், மலைக்கோயிலில் கார்த்திகைப் பெருவிழா நடந்தது. வைகாசி கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடிகோயிலில் உச்சிக்கால பூஜையில், குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலைக்கோயிலில் மூலவருக்கு அபிஷேக, சிறப்புபூஜை நடந்தது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.