ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர்தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல, இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின்மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.