தெரிந்தோ, தெரியாமலோ கடவுளின் பெயரை எப்படி சொன்னாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள் அருளாளர்கள். உதாரணமாக, ஐயா வந்தாரா... தெரியுமா? என்று ஒருவரிடம் கேட்டால்,அவர் வந்தாராம், நடந்ததைக் கேட்டாராம். கொஞ்ச நேரம்காத்திருந்தாராம். அப்புறம் சாப்பிட்டாராம், கிளம்பிட்டாராம் என்று பதில் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி வார்த்தைக்கு வார்த்தை ராம் என்றதால் சொன்னவர், கேட்டவர் இருவருக்கும் ராம பக்தரான ஆஞ்சநேயரின் அருள் கிடைக்கும் என்கிறார் வாரியார்.