உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாசங்கம்பட்டி-மணல்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் கிடாவெட்டு திருவிழா நேற்று பெட்டி எடுத்தல் மற்றும் ராக்காச்சியம்மன் சிலையெடுப்பு திருவிழாவுடன் துவங்கியது.இன்றிரவு 7:00 மணிக்குமாசாண கருப்புசாமிக்கு பூக்கொப்பரை எடுத்தல், ஜூன் 1 இரவு சுவாமி அம்மன் குதிரை வாகனபவனி, 2ம் தேதி இரவு நந்தீஸ்வரர் கரகம், 3 ம்தேதி இரவு சுவாமி அம்மன் குதிரை வாகன பவனி, 4ம் தேதி காலை 6:00 மணிக்குபொங்கல் வைத்தல் மற்றும் கிடாவெட்டு திருவிழா நடக்கிறது. ஜூன் 5 ம்தேதி மாலை 4:00 மணிக்கு பாரிவேட்டை, மஞ்சள் நீராடுதல் விழா நடக்கிறது. 22 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மூத்தவர் மொந்தக்குட்டித்தேவர் மக்கள் இரண்டு தேவர் வகையறாக்கள், நாட்டாமங்கலம் சக்கரைப்பட்டி அக்காள் மகன் சக்கரை மற்றும் சங்கம்பட்டி மணல்பட்டி கிராம மக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.