மஞ்சூர் : மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பாண்டு கிருத்திகை பூஜையையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. முருக பக்தர்களின் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.
* ஊட்டி அடுத்துள்ள கீழ்அப்புகோடு அனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், முருக பெருமானுக்கு அபிேஷகம், நவகிரக தெய்வங்களுக்கு ஆராதனை பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.