அஞ்சுகுழிப்பட்டி கோயில் திருவிழா: கழுமரம் ஏற்ற நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2017 11:06
சாணார்பட்டி: சாணார்பட்டி ஆருகே அஞ்சுகுழிப்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கழுமர ஏற்றம் நடந்தது.
கடந்த மே 26 அன்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மறுநாள் காலை காளியம்மன் மற்றும் பகவதியம்மன் பூஞ்சோலை அடைந்தனர். மே 30 ம் தேதி இரவு சாமி ஆட்டத்துடன் நகைப்பெட்டி எடுத்து தேர்பவனி வந்து முத்தாலம்மனுக்கு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க அம்மன் கோவிலை அடைந்தார். மறுநாள் படுகளம் போடுதல், மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு புராண நாடகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று எண்ணெய் கழுமர ஏற்றம் நடந்தது. இரவு மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை அடைவதுடன் விழா நிறைவடைந்தது.