பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
12:06
கோத்தகிரி: கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டத்துளசியம்மன் திருவிழாவை ஒட்டி, கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து சென்ற கரக ஊரவலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோத்தகிரி–குன்னுார் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுதுார், பட்டத்துளசியம்மன் கோவில், 27ம் ஆண்டு திருவிழா, 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, நாள்தோறும் உபயதாரர்கள் மூலம், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. இவ்விழாவின் ஒரு நிகழ்வாக, 28ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, சக்திவேல் எடுத்து, கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து திருவீதி உலா நடந்தது. பகல், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இவ்விழாவை ஒட்டி, நேற்று காலை, 7:30 முதல், 9:00 மணிவரை அபிஷேக அலங்கார பூஜையும், இரவு, 7:00 மணிக்கு மதுரை வீரன் பூஜையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 10:00 மணிமுதல், 12:00 வரை, மூனீஸ்வரர் பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவின் முக்கிய நாளான இன்று காலை, 9:00 முதல், 10:30 மணிவரை பால்குளிரூட்டும் நிலையம் ஆற்றங்கரையில் இருந்து, பால்குடத்துடன், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. வரும், 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு நடைபெறும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.