கோவை : மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், காந்திஜி லே - அவுட்டில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 10.40 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தன. காலை 8.40 மணிக்கு கலசங்கள் எடுத்து வரப்பட்டன; முதலில் கோபுரங்களுக்கும், தொடர்ந்து மூல விநாயகர் மற்றும் பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.