ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாயொட்டி ராமர், ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தலவரலாறு குறித்து பக்தருக்கு விளக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படும். நேற்று முதல்நாள் விழாவான ராவணன் சம்ஹாரம் யொட்டி, திருக்கோயிலில் இருந்து ஸ்ரீராமர் தங்க கேடயத்தில் சீதை, லெட்சுமணருடன் புறப்பாடாகி, திட்டகுடியில் துர்க்கை அம்மன் கோயில் அருகே எழுந்தருளினார். பின் அங்கிருந்த ராவணன் உருவ பொம்மை மீது ஸ்ரீ ராமர் அம்பு எய்து சம்ஹாரம் செய்து, முக்தி அளித்தல் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர். பின் ஸ்ரீ ராமருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.