பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
01:06
திருத்தணி:ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று முன்தினம், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை பகுதியில் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமையில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர் சிவ - விஷ்ணு, திருத்தணி மற்றும் நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சாய்பாபா சன்னதியில், சிறப்பு பூஜைக்கு முன், சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் நடந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது.