திருவண்ணாமலை: ஆரணியில், கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில், ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லாஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், 92ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த, 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி, சுவாமி தேரில் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணி அளவில் ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டு கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.