வால்பாறை: வால்பாறை கக்கன்காலனி மதுரைவீரன், முனீஸ்வரன் கோவில் மகாகும்பாபிஷேக விழா இன்று(9ம்தேதி) காலை நடக்கிறது. வால்பாறை கக்கன்காலனியில் உள்ள மதுரைவீரன்,முனீஸ்வரன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் முகப்பு வாயிலில், 15 அடி உயரத்தின் முனீஸ்வரன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகவிழா இன்று(9ம்தேதி) நடைபெறுவதையொட்டி நேற்று முன் தினம் பக்தர்கள் பல்வேறு கோவில்களிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீரை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். விழாவில், நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. இன்று காலை, 9:30 மணிக்கு திருக்குட நன்நீராட்டுவிழா நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.