பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
02:06
ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, வீரமங்கலத்தில் நாளை மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம் கிராமத்தில் உள்ள
திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த, 1ம் தேதி பகாசூரன் குப்பம் நிகழ்ச்சியுடன் களைகட்டியது. அன்று துவங்கி, இன்று சனிக்கிழமை இரவு வரை, வில் வளைப்பு, பகடை துகில், கிருஷ்ணன் தூது என, தினமும் பல்வேறு தெருக்கூத்து நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இன்று, கர்ண மோட்சம் நாடகம் நடைபெறும். இதன் உச்சகட்டமாக, நாளை காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் காலை தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும்,
மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.