திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் 52ம் ஆண்டு மண்டல பூஜை விழா நாளை (16ம் தேதி) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, 17, 18ம் தேதிகளில் காலை 10.00 மணிக்கு நவகலச அபிஷேகம், 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு உற்சவ பலி பூஜை, இரவு 7.00 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நவகலச அபிஷேகம்; இரவு 7.00 மணிக்கு பறையெடுப்பு; 8.00 மணிக்கு தாயம்பகை மேளத்தை தொடர்ந்து, இரவு 10.00 மணிக்கு பள்ளி வேட்டை நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை 7.00 மணிக்கு ஆறாட்டு மற் றும் அய்யப்ப சுவாமி பவனி புறப்படுதல்; மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு பஞ்சவாத்தியம், வாணவேடிக்கை முழங்க விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் அய்யப்பன் ஊர்வலம், பெருமாள் கோவில், மாநகராட்சி, குமரன் ரோடு வழியாக டவுன் ஹாலில் நிறைவுபெறும்; இரவு 10.00 மணிக்கு கொடி இறக்கப்படும். மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் தினமும் இரவு சமய சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை அய்யப்பன் பக்தஜன சங்கத்தினர் செய்து வருகின்றனர்.