பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நேற்று, வேணுகோபால் திருக்கோலத்தில் முக்கியவீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில், வேணுகோபால் கோலத்தில், பெருமாள் நேற்று காட்சியளித்தார். முன்னதாக காலை , 5:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், செட்டித்தெரு, விளக்கடி கோவில் தெரு, மேட்டுத்தெரு, காமராஜர் சாலை வழியாக, ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவிற்கு சென்றார். அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின், ராஜவீதிகளில் பவனி வந்து, சின்ன காஞ்சிபுரம் யாதவர் சத்திரத்தில் மண்டகப்படி நடந்தது. காலை, 11:00 மணிக்கு பெருமாள் கோவிலை சென்றடைந்தார். கோவிலின் நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடை பெற்றது. அதைதொடர்ந்து, கண்ணாடி அறைக்கு சென்ற பெருமாளுக்கு திருமஞ்சனம் நடை பெற்றது. மாலை , 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் வீதிவுலா நடைபெற்றது.