ஜம்பேரி கெங்கையம்மன் கோவில் கூழ் வார்த்தல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2017 12:06
திருக்கழுக்குன்றம்: ஜம்பேரி கிராமத்தில், கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஜம்பேரி கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் உள்ளது. அதன்படி, இந்தாண்டு இவ்விழா, 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் குடம் வீதி உலாவும்,பகல்,1:00 மணிக்கு கூழ் வார்த்தலும் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை வணங்கினர்.