பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
12:06
திருத்தணி: ரேணுகாம்பாள் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர், மோட்டூர் அருந்ததி காலனியில், ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று, தீமிதி திருவிழா நடந்தது. காலை ,10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை , 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை , 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அக்னி குண்டம் முன் எழுந்தருளினார். தொடர்ந்து, சின்னகடம்பூர் மோட்டூர் கிராமம், அருந்ததி காலனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். அப் போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.