கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் நடந்த தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 30ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதனையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக கடந்த 4ம் தேதி தெருவடைச்சானிலும், 8ம் தேதி தேரிலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 12ம் நாள் உற்சவமாக தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முருகர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தைத் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு சிவகர தீர்த்தகுளத்தில் எழுந்தருளி, திருக்குளத்தில் 9 முறை வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு மாடவீதியுலா நடைபெற்றது. இறுதி நாளான நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது.