பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
01:06
கோவை : வட மாநிலத்திலுள்ள சக்தி பீடங்கள் வரை இயக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயிலில், 648 பேர் நேற்று ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமானது (ஐ.ஆர்.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இச்சிறப்பு ரயில்களில் தேசத்திலுள்ள ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில், வட இந்தியா வரையுள்ள சக்தி பீடங்களை தரிசிக்க ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயிலில் முன்பதிவுகள் நடந்தன. அலகாபாத்தில் அலோப்பிதேவி, காசிவிசாலாட்சி என சக்தி பீடங்கள் உள்ள பல்வேறு இடங்களுக்கு, 12 நாட்கள் கொண்ட பயணமாக இந்த ரயில் நேற்று புறப்பட்டது. ஒரு நபருக்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 648 பேர் புறப்பட்டனர். இந்த ரயில், ஈரோடு, கரூர், மதுரை, சென்னை வழியாக அலகாபாத் வரை செல்கிறது. ஆன்மிக சுற்றுலா ரயில் விபரங்களுக்கு, தீதீதீ.டிணூஞிtஞிtணிதணூடிண்ட்.ஞிணிட் என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.