சிங்கபெருமாள்கோயில்: சிங்கபெருமாள்கோயில் பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோயிலில், ராஜ கோபுர திருப்பணி விரைந்து முடிக்க, புஷ்ப யாகம் நடைபெற்றது. சிங்கபெருமாள்கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி விரைந்து முடிக்க, புஷ்ப யாகம் நடத்த, கோயில் நிர்வாகம் மூடிவெடுத்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம், ராஜகோபுர திருப்பணிகள் விரைந்து நடைபெற, பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீதாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பட்டாச்சாரியர்கள் இணைந்து நடத்தினர்.