திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2017 11:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கின.கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். எதிரே சுப்ரமணியர் சன்னதியும் இடையில் கங்கைக்கு நிகரான வற்றாத புனித தீர்த்தம் அடங்கிய சுனையும் உள்ளது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேல் செப், மாதம் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
இக்கோயில் கட்டப்பட்ட காலம் முதல் விமானமோ, சாளகரமோ அமைக்கப்படவில்லை. 2005 ல் விமானம், சாளகரம் அமைத்து கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளான நிலையில் தற்போது 20 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சரவணப் பொய்கை அருகேயுள்ள புதிய படிக்கட்டுகளில் உள்ள மண்டபங்கள், விநாயகர் கோயிலில் இருந்து திருப்பணிகள் நடத்தப்பட உள்ளது.
திருப்பணிகளில் ஈடுபட விரும்பும் உபயதாரர்கள் கோயில் அலுவலகம், கோயிலுக்குள் உள்துறை அலுவலகம் அல்லது 0452-2482248ல் தொடர்பு கொள்ளலாம் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துறை தெரிவித்தார்.