பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
12:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பாலேப்பள்ளி கோதண்டராமர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த பாலேப்பள்ளி கிராமத்தில் உள்ள கோதண்டராமர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 12ல் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், ரக்?ஷாபந்தனம், முளை வைத்தல், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கோபுரத்தில் தானியம் நிரப்புதல், இரவு, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், 1:00 மணிக்குள், சுக்கிர புத ஓரையில் சக்ர ஸ்தாபனம், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நரண்யாச ஹோமம் மற்றும் 9:00 மணிக்கு, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின், கோ பூஜையை தொடர்ந்து சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.