தாண்டிக்குடி: தாண்டிக்குடி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மலைவாச விநாயகர், குறிஞ்சி நில முருகன், பஞ்சகிரீச ஐயப்பன், 18ம் படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூன்று கால யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீர்த்த குடங்கள் அழைத்தல், அங்குரார்பணம் உள்பட பலவும் நடந்தன. கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜையுடன் புனித நீர் கலசத்திற்கு ஊற்றப்பட்டது. தீபாராதனைக்கு பின் ஐயப்பசுவாமி மலர்களால் அங்கரிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.