பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
11:06
உடுப்பி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 18ம் தேதி, கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதால், அன்றைய தினம் காலை, 10:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக, நாளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெங்களூரு வருகிறார். 18ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் அவர், மூகாம்பிகையை தரிசிக்கிறார். இதை முன்னிட்டு, அன்றைய தினம், காலை, 10:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள், மூகாம்பிகை கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தரிசனத்துக்கு பின் கோவிலின் விருந்தினர் இல்லத்தில், சிறிது நேரம் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி, மாலை, 5:00 மணிக்கு பெங்களூரு திரும்புகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை, உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.