தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றம்,காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அமமனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறபபு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தான அலுவலர்கள்,கிராமத்தினர் பங்கேற்றனர். இக்கோயில் தேரோட்டம் ஜூன் 23ல் நடக்கிறது.