பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
01:06
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில், நாளை 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் குமாரர் ஸ்ரீஹரி அண்ணாவின், ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை உபன்யாசம் நடைபெறும். 19ம் தேதி ராம ஜனனம், 20ம் தேதி சீதா கல்யாணம், 21ம் தேதி பித்ருவாக்ய பரிபாலனம், 22ம் தேதி குஹ ஸக்யம், 23ம் தேதி பாதுகா பட்டாபிஷேகம், 24ம் தேதி ஜடாயு மோக்ஷம் உபன்யாசம் நடக்கிறது. 25ம் தேதி காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை சீதா கல்யாண மகோற்சவம், உஞ்சவ்ருத்தி, திவ்யநாம பஜனை நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்ரீமதி விசாகா ஹரிஜியின், ஸீக்ரீவ ஸக்யம் சங்கீத உபன்யாசம் நடக்கிறது. 26ம் தேதி சுந்தர காண்டம், 27ம் தேதி யுத்த காண்டம், ராம பட்டாபிஷேக உபன்யாசம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.