பரமக்குடி: காட்டுப்பரமக்குடியில் புனித பதுவை அந்தோணியார் சர்ச்சில் தேர்ப்பவனி நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆயரின் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி பங்குத் தந்தை செபஸ்தியான் வரவேற்றார். மாலை 6:00 மணிக்கு துவங்கிய திருப்பலியில் பங்குமக்கள், பங்கு பேரவையினர் கலந்து கொண்டனர். இரவு 7 :00 மணிக்கு காட்டுப்பரமக்குடி முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோணியார் திருவுருவத்துடன், மின் தேரில் பவனி நடந்தது. பின்னர் இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.