காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி துவங்கியுள்ளது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நகர் பகுதியில் கயிலாசநாதர், அம்மையார் கோவில்,நித்யகல்யாணப்பெருமாள்,ஆற்றங்கரை விநாயகர்,பொய்யாதமூர்த்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் உள்ளது. கோவில் உண்டியல் நிரம்பியது. மேலும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்ட அனைத்து கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும்பணி துவக்கியது.இதை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணிகள் துவங்கியது.