பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
11:06
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாள்தோறும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். நேற்று, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. அதில், 17 லட்சத்து, 52 ஆயிரத்து, 144 ரூபாய், 88 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
* நாமக்கல், நரசிம்மசாமி கோவில் உண்டியலும் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. அதில், ஐந்து லட்சத்து, 38 ஆயிரத்து, 306 ரூபாய், 38 கிராம் தங்கம், 36 கிராம் வெள்ளி இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். பக்தர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.