கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கத்தில் உளள ராகவேந்திரர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூஜை கடந்த 16ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கோ பூஜை, ஆச்சார்ய பூஜை, ரக்ஷாபந்தனம், கலச பிரதிஷ்டை, வேதபாராயணம், பாலிகா, வாஸ்து பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் ஏகாதசி மற்றும் வேதபாராயணம் நடந்தது. நேற்று காலை 6:40 மணிக்கு கடம் புறப்பாடாகியது. ஸ்ரீமான் ராஜாகிரியாச்சார் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.