பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
12:06
திருமழிசை : நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவில் குளத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்து அமைந்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.இந்த குளத்திற்கு, சுற்றுச்சவர் இல்லாததால், குடி மையமாக மாறி வந்தது. மேலும், கோவில் குளத்தில் அடிக்கடி விபத்து கள் ஏற்பட்டு வந்தன.இது குறித்தான செய்தி நமது நாளிதழில் வெளியானதையடுத்து, அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுத்து, கோவில் உபயதாரர் நிதியின் கீழ், 50 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில், திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் குளத்திற்கு, கம்பி வேலியுடன் கூடிய புதிய சுற்றுச்சுவர் அமைத்து உள்ளனர்.