பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
02:06
மல்லசமுத்திரம்: மரப்பரையில், மழை வேண்டி வருண ஜபம் மற்றும் யாகபூஜைகள் நாளை நடக்கின்றன. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்ப மலை அடுத்த, மரப்பரை கிராமத்தில், பழமை வாய்ந்த நாகேஸ்வரர், சிவகாமி அம்மாள் கோவில்கள் உள்ளன.
இங்கு, நாளை (ஜூன், 28) மழை வேண்டி வருண ஜபம் மற்றும் யாகபூஜைகள் நடக்க உள்ளன. காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை விநாயகர், கோ பூஜை, கலசங்கள் ஆலாஹனம்,
திவ்யாகுதி, வருணஜபம், அலங்கார மஹா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.