Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயூரநாத சுவாமி ஆனி விழா துவக்கம் குருவின் சாபம் பெற்ற மன்னன்... பரிகாரமாக உருவானது கோயில் குருவின் சாபம் பெற்ற மன்னன்... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனரமைப்பு பெறும் புதையுண்ட கோயில்
எழுத்தின் அளவு:
புனரமைப்பு பெறும் புதையுண்ட கோயில்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
11:07

வேடசந்துார்:   இவ்வூருக்கு வடக்கே குடகனாற்றின் மேற்கு கரையோரம் உள்ள கிராமம் கோட்டைமேடு. முன்பொரு காலத்தில் இப்பகுதி மன்னர்களின் கோட்டையாக இருந்திருக்கலாம் என்றும், அது மேடான பகுதியாகவும் உள்ளதால் கோட்டை மேடு என அழைக்கப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் இன்றும் செவிவழிச் செய்தியை தெரிவிக்கின்றனர்.  இந்த ஊருக்கு வடபுறம் ஆற்றங்கரையோரத்தில் மண்ணுக்குள் லிங்கம் ஒன்று தெரிவதாக 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்களிடையே தகவல் பரவியது. அப்பகுதியினர் மண்ணை தோண்டி பார்த்ததில் மிகப்பெரிய லிங்கம் ஒன்று கிடைத்தது. மேலும் துளாவியதில் நந்தி மற்றும் இரண்டு ஆள் உயர பூதக்கற்கள் கிடைத்தன.

இவற்றை அங்கேயே வைத்து சுத்தம் செய்து வணங்கி வந்தனர். பின் சிறிய அளவில் கொட்டகை அமைத்தனர். அது ஆஸ்பெஸ்டாஸ்’ கொட்டகையாக மாறி, இன்று கோயிலாக வளர்ந்துவிட்டது.  சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் தனியார் மில் நிர்வாகத்தினர் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமின்றி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் விஷேச பூஜை நடத்தி அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கி வருகின்றனர். திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது குறித்து கோயில் பூஜாரி பெருமாள் கூறியதாவது: இந்த கோயில் யாரால், எந்த காலத்தில் கட்டப்பட்டது என ஒருவருக்குமே தெரியவில்லை. யார் கனவிலோ வந்து சொன்னதைத் தெரிந்து, ஊர் மக்கள் ஒன்றாகக்கூடி தோண்டி எடுத்து சிலைகளை வெளியே எடுத்து வணங்கி வருகிறோம். கோட்டைமேட்டில் உள்ள இந்த சுவாமிக்கு கோட்டை கோடீஸ்வரன்’ என பெயர் வைத்து தற்போது சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார்.  இப்பகுதியில் ஒரு காலத்தில் பெரிய அளவிலான ஊர் இருந்திருக்கலாம். அது இப்பகுதி கோட்டையாகவும் விளங்கி இருக்கலாம். அதுவே காலப்போக்கில் கோட்டைமேடாக உருமாறி விட்டதாகத் தெரிகிறது. இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்கின்றனர் முதியோர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar