பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
11:07
புதுச்சேரி: கதிர்காமம், விவேகானந்தா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, இன்று 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. கதிர்காமம் விவேகானந்தா நகரில் வலம்புரி விநாயகர் ஆலயம், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், நவக்கிரகம், காலபைரவர், வீரபக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளது. இக்கோவில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா இன்று (3ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நேற்று மாலை அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 1008 சங்கு பூஜையும், முதற்கால யாக பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. இன்று (3ம் தேதி) காலை 7:15 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால சங்கு பூஜை, விசேஷ உபசார பூஜை, 1008 சங்காபிஷேகம், சுவாமிகள் சிறப்பு அலங்கார அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.