திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2017 11:07
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் நேற்று கும்பாபிஷேக தினத்தையொட்டி வருஷாபிஷேகம் நடந்தது.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்ஆண்டுதோறும் தை உத்திரத்தன்று மூலவர் பிரதிஷ்டை செசய்யப்பட்ட தினம் மற்றும் ஆனி ஸ்வாதி நட்சசத்திரத்தில் கும்பாபிஷேக நடந்த தினம் ஆகிய இரு நாட்களில் வருஷாபிஷேகம் நடக்கிறது.
இதில் ஆனி மாதம் ஸ்வாதி நட்சசத்திரத்தையட்டி கும்பாபிஷேகம் தின வருஷாபிஷேகம் நேற்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு தங்க கொடிமரம் அருகே கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செசய்யப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கும்ப கலசசங்கள் விமான தளத்திற்கு எடுத்து செசல்லப்பட்டது. காலை 8.30 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்திகோஷம் முழங்க மூலவர் மற்றும் சசண்முகர் விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செசய்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமான கலசசங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். விமானங்களுக்கு தீபாராதனை நடந்தது. கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.