பதிவு செய்த நாள்
04
ஜூலை
2017
01:07
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சிறப்பு வேள்வியாக பூஜை நடந்தது. பின், நடராஜர் மற்றும் அம்மன் உற்சவ சிலைக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு உட்பட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. நடராஜருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.