அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு வருடமும் ஆனி பிரம்மோற்ஸவ விழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் தினமும் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியார்களின் நிகழ்ச்சி நடைபெறும். பத்தாம் நாள் விழாவாக, நேற்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை போன்று நடக்கும் இந்த திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பதினோறாம் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக வந்து நிலையை அடையும். ஏற்பாடுகளை செயல் அலுவலர்தலைமையில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.