பதிவு செய்த நாள்
06
ஜூலை
2017
01:07
விழுப்புரம்: விழுப்புரம், காமராஜர் வீதியிலுள்ள அமராபதி விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் காமராஜர் வீதியிலுள்ள அமராபதி விநாயகர் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 11:05 மணி முதல் 11:45 மணிக்குள் மூலவர் விமானம், மூல ஸ்தான ஸ்ரீஅமராபதி விநாயகப் பெருமானுக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20 வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி, மகாலட்சுமி குரூப்ஸ் சேர்மன் ரமஷே், தக்கார் சரவணன், அர்ச்சகர்கள் பாஸ்கர சிவம், கீர்த்திவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.